ETV Bharat / bharat

இஸ்லாமிய முதியவர் காணொலி பகிரப்பட்ட விவகாரம்: ட்விட்டர் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராக விலக்கு!

author img

By

Published : Jun 24, 2021, 8:03 PM IST

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலான காணொலி ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட விவகாரத்தில், ட்விட்டர் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி நேரில் வந்து விளக்கமளிக்க கர்நாடகா உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

Karnataka HC grants interim relief to Twitter chief

பெங்களூரு (கர்நாடகா): உத்தரப் பிரதேசம், காசியாபாத்தில் உள்ள லோனி என்ற பகுதியைச் சேர்ந்த சஃபி அப்துல் சமத் எனும் முதியவர், தன்னை ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து ’ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூறச் சொல்லி தாக்கியதாகக் கூறி அழும்படியான வீடியோ ஒன்றை, கடந்த 5ஆம் தேதி ட்விட்டரில் பகிர்ந்தார். இந்த வீடியோ பெரும் விவாதங்களை எழுப்பியது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இச்சம்பவம் உண்மைக்கு புறப்பானது எனத் தெரிய வந்ததையடுத்து, இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம், செய்தித்தளமான தி வயர், பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர், ராணா அய்யூப் ஆகியோர் மீது கடந்த ஜூன் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்தக் காணொலி மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி முன்னதாக லோனி காவல் துறையினர், இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பெங்களூருவில் வசிக்கும் ட்விட்டர் இந்தியாவின் இயக்குநர் மனீஷ் மகேஸ்வரிக்கு சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் மனீஷ் மகேஸ்வரி நேரில் ஆஜராக கர்நாடகா உயர் நீதிமன்றம் தற்போது விலக்கு அளித்துள்ளது. மேலும், மனீஷ் மகேஸ்வரியை வற்புறுத்தி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் காஜியாபாத் காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.