ETV Bharat / bharat

ரயில்வே ஊழியரின் 2வது மனைவிக்கும் ஓய்வூதியம் பெறும் உரிமை: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு - ரயில்வே ஊழியரின் 2வது மனைவிக்கும்

Karnataka HC: ரயில்வே சேவை விதிகளை மேற்கோள்காட்டி, மரணமடைந்த ரயில்வே ஊழியரின் இரண்டாவது மனைவிக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை பெறுவதற்கு உரிமையுண்டு என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Karnataka HC
கர்நாடக உயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 5:02 PM IST

Updated : Dec 22, 2023, 5:26 PM IST

பெங்களூரு: இந்திய ரயில்வே வழங்கும் ஓய்வூதியத்தை இந்திய ரயில்வே சேவை விதிகளின்படி, ரயில்வே ஊழியர்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளின் குடும்பமும் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் எனவும் ஆகவே, உயிரிழந்த ரயில்வே ஊழியரின் மனைவி குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவி மற்றும் அவரது மகள்களுக்கு 50% குடும்ப ஓய்வூதியம் வழங்க தென்மேற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே ஊழியரின் இரண்டாவது மனைவியின் மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (டிச.22) விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு ஊழியர் அல்லது அவரது குடும்பத்தினரின் உரிமைகள் ஓய்வூதிய விதிகளைப் பொறுத்தது என்றும் இந்த விதிகளை பின்பற்றியே ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

ஓய்வூதியத்திற்கான ரயில்வே சேவைகள் விதிகள் 1993, 2016-ல் விதிகள் திருத்தப்பட்டு ரயில்வே விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி, விதியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதவைகள் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு வெளிப்படையாக உரிமை உண்டு. இதன்மூலம், உயிரிழந்த பணியாளரின் மனைவிகளுக்கு சமமாக ஓய்வூதியம் விநியோகிக்கப்படுகிறது.

இது தொடர்பான மனுவில், ரயில்வே ஊழியருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருக்கும்போது இது பொருந்தும். ஒருவேளை, இரண்டாவது மனைவி இருக்கும்பட்சத்தில், அவருக்கு 50% ஓய்வூதியம் கிடைக்கும் என நீதிபதி கூறினார். மேலும், முதல் மனைவி மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கு 50% ஓய்வூதியம் வழங்குமாறு பெங்களூரு குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையிட தேவையில்லை என நீதிபதி தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி என்ன?: இவ்வழக்கில், ஆர்.ரமேஷ்பாபு என்பவர் தென்மேற்கு ரயில்வேயின் முதுநிலைப் பிரிவு பணியாளர் மேலாளர் அலுவலகத்தில் போக்குவரத்துப் பிரிவில் புள்ளியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகிய நிலையில், முதல் மனைவிக்கு மூன்று மகள்களும், இரண்டாவது மனைவியான திருப்பதியை சேர்ந்த புஷ்பாவிற்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இதையடுத்து இவரது முதல் மனைவி தனது கணவர் பாபுவிற்கு வரவேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை தனது குடும்பத்திற்கு அளிக்குமாறும், இரண்டாவது மகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வேண்டுமெனவும் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதற்கிடையே, இரண்டாவது மனைவியும் இப்பலன்களைப் பெறுவதற்கு தகுதியானவர் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சலுகைகளை வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பினருக்கும் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னரே, இதுபோன்ற ஓய்வூதிய பலன்கள் செய்து தரப்படும் என முதல் மனைவிக்கு தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முதல் மனைவி பெங்களூருவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, சட்டப்பூர்வமாக முதல் மனைவி என்பதால் தனக்கே வசதிகள், கருணை வேலை வாய்ப்பு மற்றும் நிலுவைத்தொகை வழங்க தென்மேற்கு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதேநேரத்தில், இரண்டாவது மனைவி மெமோ ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், முதல் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு 50% ஓய்வூதியத்தை 2022 ஜூலை 22ஆம் தேதி வழங்க நைருத்வா ரயில்வே (Nairutwa Railway Board) வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இரண்டாவது மனைவி கர்நாடகா உயர்நீதிமன்றத்தை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது மு.க.ஸ்டாலின் டெல்லியில் என்ன செய்தார்? - நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி

Last Updated : Dec 22, 2023, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.