பெங்களூரூ: கோயில்களில் நடத்தப்படும் பூஜைகளில் மாநில மொழிகளிலுள்ள வார்த்தைகள் பயன்படுத்தலாம் என்று ‘கர்நாடக தார்மிக பரிசத்’-இல் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேவதிகே சலாம், சலாம் மங்களாரத்தி, சலாம் ஆரத்தி ஆகியவை கடவுளுக்கு காலை, மதியம், மாலை ஆகிய பொழுதுகளில் நடத்தப்படும் பூஜைப் பெயர்களாகும்.
அறநிலைத்துறையின் மூத்த ஆகம அர்ச்சகர்களைக் கொண்டு, ’தேவதிகே சலாம்’ என்கிற பெயரை இனி ‘தேவதிகே நமஸ்கார்’ என்றும் ‘சலாம் ஆரத்தி’ என்கிற பெயரை ஆரத்தி நமஸ்கார்’ என்றும் ‘சலாம் மங்களாரத்தி’ என்கிற பெயரை இனி ‘மங்களாரத்திஒ நமஸ்கார் என்றும் மாற்றியமைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடிய விரைவில் ஆணை வெளியிடப்படுமென அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளை கணக்கில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலைத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே கூறுகையில், “பிறமொழி வார்த்தைகளை தவிர்த்து நம் மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளோம்.
இந்த நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் எந்த விதத் தடைகளுமின்றி கோயில்களில் தொடருமெனத் தெரிவித்துள்ளார். இந்த ’சலாம் ஆரத்தி’பூஜை வழிமுறையானது மைசூர் மன்னர் திப்பு சுல்தான் காலத்திலிருந்து கர்நாடகாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பூஜைமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிரட்டல் யானை ...யாருக்கிட்ட வெட்டிங் ஷூட் எடுக்க வந்த பிச்சுப்புடுவேன்..