ETV Bharat / bharat

Karnataka Election: 'தன்னைப்பற்றிய வைரல் கடிதம்; பாஜகவின் சதிச்செயல்!' - சித்தராமையா குற்றச்சாட்டு! - டி கே சிவகுமார்

காங்கிரஸ் மேலிடத்திற்குத் தான் எழுதியதாக சமூக வலைதளங்களில் பரவும் கடிதம் போலி என்றும்; அது பாஜகவின் சதிச் செயல் என்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

Siddaramaiah
Siddaramaiah
author img

By

Published : May 9, 2023, 7:56 PM IST

பெங்களூரு : கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கிய நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு எதிராக கட்சி மேலிடத்திற்கு தான் கடிதம் எழுதியதாகக் கூறி, பாஜக சதிச் செயலில் ஈடுபட்டு உள்ளது என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாதமாக நடந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில், தற்போது கர்நாடகமே நிசப்த அலையில் நிழலாடி வருகிறது. மக்கள் முடிவுகளுக்காக பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் காத்திருக்கின்றன. இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கட்சி மேலிடத்திற்கு எழுதியதாக கடிதம் சமூக வலைதளத்தில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக பேசிய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 'கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு எதிராக கட்சி மேலிடத்திற்கு தான் எழுதியதாக வைரலாகும் கடிதம் பாஜகவின் சதிச் செயல்' எனத் தெரிவித்து உள்ளார்.

மேலும் தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக இது போன்ற சதிச்செயலில் ஈடுபட்டு உள்ளதாக சித்தராமையா கூறினார். கட்சி மேலிடத்திற்குத் தான் எந்தவொரு கடிதத்தையும் எழுதவில்லை என அவர் தெரிவித்தார். சமூக வலைதளத்தில் பரவும் கடிதம் போலி என்றும்; திட்டம் போட்டு பாஜக அதைப் பரப்பி வருவதாகவும் கூறினார்.

போலி கடிதம் தொடர்பாக விரைவில் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கட்சித் தொண்டர்கள் இந்த பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்றும்; டி.கே. சிவகுமாருடன் தனக்கும் நல்லுறவு இருப்பதாகவும் இதை உடைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்றும் சித்தராமையா தெரிவித்தார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, "ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி கடந்த ஓராண்டாக நாங்கள் பிரசாரம் செய்தோம். அடுத்த முதலமைச்சர் தான் என்பதை மக்கள் முன்னிலையில் உணர்த்த வேண்டும் என்பதற்காக தனது தொண்டர்களை வைத்து கோஷம் எழுப்பி, கட்சியின் மற்ற தொண்டர்களிடையே சிவகுமார் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

கட்சியில் அனைத்து முடிவுகளும் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியின் மீதான ஆர்வத்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்தேன். ஆனால், கோலார் தொகுதியில் போட்டியிடுவதை முறியடிக்கும் டி.கே. சிவகுமாரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதனால், மாநிலம் முழுவதும் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எனது ஆசை முறியடிக்கப்பட்டு உள்ளது. டி.கே. சிவக்குமார், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் அநீதி இழைத்துள்ளார். எனது ஆதரவாளர்கள் என்ற காரணத்திற்காக கட்சியில் சீட் வழங்க சிவகுமார் மறுத்தார். டி.கே.சிவக்குமார் தனது சாதுர்யத்தால் ஓபிசி சமூகத்தை எனக்கு எதிராக திரும்ப வைத்துள்ளார்" எனக் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Imran Khan arrest : இம்ரான் கான் கைது! இஸ்லாமாபாத்தில் 144 தடை! என்ன காரணம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.