ETV Bharat / bharat

kantara part 2: பிரம்மாண்டமாக உருவாகிறது காந்தாரா 2: ரிஷப் ஷெட்டி அறிவிப்பு! - விஜய் கிராகண்டூர்

காந்தாரா திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் காந்தாரா திரைப்படத்தின் முன்கதை இரண்டாவது பாகமாக வெளியாகும் என ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்

பிரம்மாண்டமாக உருவாகிறது காந்தாரா 2... ரிஷப் ஷெட்டி அறிவிப்பு

author img

By

Published : Feb 7, 2023, 12:44 PM IST

மும்பை: கன்னட திரைப்படமான 'காந்தாரா' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை நிறைவு செய்தது. காந்தாரா 100வது நாள் கொண்டாட்ட விழாவில் இத்திரைப்படத்தின் முன்கதை எடுக்கப்படும் என படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி அறிவித்துள்ளார்.

100வது நாள் கொண்டாட்ட விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, "காந்தாரா திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த பெரும் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தெய்வத்தின் அருளோடு காந்தாரா திரைப்படம் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த தருணத்தில் காந்தாரா திரைப்படத்தின் முந்தைய பதிப்பை படமாக்கவுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

காந்தாரா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு காந்தாரா படத்தின் முன்கதைக்கான யோசனை தோன்றியது. ஆழமான கருத்தை கொண்ட காந்தாரா வரலாற்றில் மேலும் நாங்கள் விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் இந்த கதைக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என கூறினார்.

பின்னர் இந்த விழாவில் பங்கேற்று பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிராகண்டூர், "கந்தாரா ஒரு புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இப்படம் தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ளதால், படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவிப்பதன் மூலம் ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க விரும்புகிறோம்." என்றார்.

காந்தாரா முதல் பாகத்தில் இருந்து தொடங்கும் காந்தாரா முன்கதையில் பார்வையாளர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வார்கள். காந்தாரா முன்கதை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். ரிஷப் மற்றும் படக்குழு ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஈடு செய்யும் வகையில் கடுமையாக உழைத்து வருகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம் நாளை ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.