ETV Bharat / bharat

கல்யாண் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல் - PM modi

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

kalyan-singh-passed-away-pm-modi-pay-final-tribute-in-twitter
கல்யாண் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
author img

By

Published : Aug 21, 2021, 10:59 PM IST

டெல்லி: உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் (89), வயது மூப்பு மற்றும் பல்வேறு நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதியுற்றுவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 4ஆம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(ஆகஸ்ட் 21) அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கல்யாண் சிங் பாஜகவிலிருந்து பிரிந்தபோது என்ன நடந்தது?

இந்நிலையில், அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த இரங்கல் ட்வீட்டில், "கால்யாண் சிங்...அரசியல்வாதி, மூத்த நிர்வாகி, அடிமட்ட தலைவர், சிறந்த மனிதர். உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஒரு மறக்க முடியாத பங்களிப்பை செய்துள்ளார்.

அவரது மகன் ராஜ்வீர் சிங்கிடம் பேசி எனது இரங்கலைத் தெரிவித்தேன். கல்யாணின் மறைவு எனக்கு வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவிற்கு வருத்தத்தை கொடுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கல்யாண் சிங்: காவிமயமான அரசியல்வாதியின் கதை

மேலும், இந்தியாவின் கலாசார மீள் உருவாக்கத்திற்கு அவர் செய்த பங்களிப்பு அலாதியானது எனவும், நமது பழமையான மரபுகளில் அவர் பெருமிதம் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.

விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டார் என்றும் பிரதமர் மோடி தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கல்யாண் சிங் ஆட்சியும், பாபர் மசூதி இடிப்பு வழக்கும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.