டெல்லி:கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(ஜூலை 18) நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழுவை நியமித்தது. மறு பிரேத பரிசோதனையின் போது தந்தை உடனிருக்கலாம் எனவும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இருப்பினும் உடற்கூராய்விற்கு நியமிக்கப்பட்டிருக்கும் மூன்று மருத்துவர்களுடன் தங்கள் தரப்பு மருத்துவர் உடனிருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் மீது நம்க்பிகை இல்லையா என கேள்வி எழுப்பினர். மேலும் இன்று மறு பிரேத பரிசோதனை செய்ய தடை இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி விவகாரம் - மெரினாவில் போலீஸ் குவிப்பு