டெல்லி: இதுதொடர்பாக அவர் மக்களவையில் பேசும்போது, "காட்டுப்பள்ளியில் ஏற்கனவே இருக்கும் துறைமுகத்தின் அளவைவிட மூன்று மடங்கு பெரிதாக விரிவாக்கம் செய்ய அதானி காட்டுப்பள்ளி துறைமுக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகப்பகுதியில் ஆண்டுதோறும் 15 மீட்டர் அளவில், கடல் அரிப்பு ஏற்படுகிறது.
அதிகப்படியான கடல் அரிப்பு கொண்ட அப்பகுதியில் துறைமுக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற சட்டம் உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டத்தின்படி, சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இருப்பினும், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதனால், உள்ளூர் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே புலிகேட் ஏரியும் அமைந்துள்ளது.
துறைமுக விரிவாக்கத்திற்கு அதனைச் சுற்றியுள்ள நீர் நிலை ஆதாரங்கள் பயன்படுத்தப்படும் போது, அப்பகுதி விவாசயிகள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பட்ஜெட் விவாதம்; மக்களவையில் நிர்மலா சீதாராமன் இன்று பதிலளிக்கிறார்!