டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் (ஜேஎன்யூ) பேராசிரியர்கள் எட்டு பேர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு எழுதியுள்ள கடிதத்தில் இயற்பியல் பிரிவில் பணி நியமனத்தில் உள்ள முறைகேடுகள் நடப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பணி நியமனங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அந்தக் கடிதத்தில், “அண்மையில் இயற்பியல் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகளை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். முதலாவதாக தேர்வான ஒரு பேராசிரியருக்கு போதிய பணி முன்அனுபவம் இல்லை.
மற்றொருவரின் பெயர் தேர்வு குழுவினரால் பட்டியலிடப்படவில்லை. ஆனால் அவர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
ஆகவே இந்த பணி நியமனங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரிக்கை விடுக்கிறோம். இந்தப் பாடப்பிரிவில் தகுதிவாய்ந்த தேர்வருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஜேஎன்யூ துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் செல்போன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திக்கும் பதில் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: ஜேஎன்யூ துணைவேந்தர் தேடுதல் குழுத் தலைவரா? - பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு