ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்த காவல் துறையினர் இருவரைக் கைது செய்தனர்.
கைதானவர்கள் நம்பலா உரியைச் சேர்ந்த லியாக்கத் அஹ்மத் கக்ரூ, பார்ம்னேட் போனியாரைச் சேர்ந்த அக்தர் அஹ்மத் மிர் என்பதும், முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் பயங்கரவாத அமைப்புக்கு வர்த்தக ரீதியாக உதவியாக இருந்ததும், கடத்தல் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. அப்போது அவர்களிடம் இருந்த இரண்டு சீன கையெறி குண்டுகள் மற்றும் சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.