பலமு: ஜார்கண்ட் மாநிலம் பலமுவில் காணாமல் போனதாக நாடமாடிய ரம்மில்லா சவுத்ரி என்னும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு, அவரது மனைவி சரிதா தேவியின் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திடீரென ராம்மிலன் சவுத்ரி காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரது மனைவி, மாமியார் கலாவதி தேவி, மாமனார் ராதா சவுத்ரி, அவரது மனைவியின் சகோதரி மற்றும் மேலும் இருவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்னும் இந்த வழக்கில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காணமல் போன ராம்மிலன் சவுத்ரியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராம்மிலன் சவுத்ரியை ஊருக்குள் சிலர் கண்டதாக காவல்துறைக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியின் குடும்பத்தை பழிவாங்கவே, காணமல் போனதாக நாடகம் போட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சினிமாவில் நடிக்க ஆசை: மனைவியை கொலை செய்த கணவன்?