ETV Bharat / bharat

தும்கா கருவூல ஊழல் வழக்கு: லாலுவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! - கால்நடை தீவனம் வழக்கு

ராஞ்சி : தும்கா கருவூல ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பிணை மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Jharkhand HC defers to Dec 11 hearing on Lalu Yadav's bail plea in Dumka treasury case
தும்கா கருவூல ஊழல் வழக்கு : லாலுவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
author img

By

Published : Nov 27, 2020, 10:35 PM IST

கடந்த 1992-1993ஆம் ஆண்டு பிகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாகவும், சாய்பாசா கருவூலப் பணத்தில் ரூ.33.67 கோடி மோசடி செய்ததாகவும் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

அந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவின் உடல் நிலையைக் காரணம் காட்டி அவருக்கு கால்நடை தீவனம் ஊழல் வழக்கு, சாய்பாசா கருவூலப் பண மோசடி வழக்கு ஆகிய இரு வழக்குகளில் ஜார்க்கண்ட் நீதிமன்றம் பிணை வழங்கியது.

கால்நடை தீவனம் ஊழல் வழக்கு, சாய்பாசா கருவூலப் பண மோசடி வழக்கு ஆகிய இரு வழக்குகளில் பிணை பெற்றாலும் தும்கா கருவூல ஊழல் வழக்கின் காரணமாக சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது மீதமிருக்கும் தும்கா கருவூல ஊழல் வழக்கிலும் உடல்நிலையைக் காரணம் காட்டி பிணை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

தும்கா கருவூல ஊழல் வழக்கு : லாலுவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
தும்கா கருவூல ஊழல் வழக்கு : லாலுவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “லாலு பிரசாத் யாதவிற்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பான அனைத்து தகவல்களையும் கீழ் நீதிமன்றத்தில் இருந்து பெற்று வந்து உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். மேலதிக வாதங்களுக்கு முன் அதை லாலு யாதவின் வழக்கறிஞர் சரிபார்க்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதி ஒத்திவைத்தது.

தும்கா கருவூல ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் லாலு பிரசாத் யாதவ் ஒருநாள் கூட சிறை தண்டனையை அனுபவிக்கவில்லை என சிபிஐ கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க : பாஜக எம்எல்ஏவுடன் பேரம் பேசும் லாலு பிரசாத் யாதவ்: வெளியான ஆடியோ விவகாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.