ETV Bharat / bharat

கேரளாவில் நகை திருட்டு - கோவை பெண் கைவரிசை - Jewells theft in kerala

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இயங்கி வரும் நகை கடையில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Jul 21, 2022, 4:57 PM IST

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பொது மருத்துவமனை சாலையில் நகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு நேற்று (ஜூலை 20) காலை சென்ற பெண் ஒருவர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா என கடை உரிமையாளரிடம் அறிமுகமாகியுள்ளார்.

மேலும், தான் மலேசியாவில் வேலை பார்ப்பதாகவும், 36 கிராம் எடையுள்ள இரண்டு நெக்லஸ்கள் வேண்டும் மாலை 5 மணிக்கு தனது கணவருடன் வந்து வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், இரவு 7.30 மணியளவில் கடை உரிமையாளர் வழக்கம்போல் நகைகளை எடுத்து வைத்தபோது 40 கிராம் எடையுள்ள இரண்டு நெக்லஸ்கள் காணாமல் போனது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

கடைக்கு வந்த கோவையைச் சேர்ந்த பெண் நகைகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகமடைந்த நகைக்கடை உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அப்பெண் தான் நகையை திருடியது உறுதியான நிலையில் இது குறித்து அவர் மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பெண்ணை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரிவாளுடன் நபர் அட்டகாசம்: பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.