சென்னை: 9 லட்சம் மாணவர்கள் எழுதிய ஜெஇஇ மெயின் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவு அளிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதர்காக ஜேஇஇ (JEE) ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படும் நிலையில், முதற்கட்டமாக கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை முதற்கட்ட தேர்வு நடைபெற்றது. ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் ஆன்லைன் வழியாக தங்களது மதிப்பெண் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: துருக்கியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு - 4,000 தாண்டிய பலி எண்ணிக்கை!