ETV Bharat / bharat

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் - ராணுவ வீரர்கள் செய்தது என்ன? - பர்மர் எல்லை

பர்மர்: இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனுக்கு ராணுவ வீரர்கள் உணவளித்து பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jawans-return-child-to-pak-rangers-after-feeding-him

author img

By

Published : Apr 3, 2021, 10:23 AM IST

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான பர்மர் வழியாக எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நேற்று (ஏப்.2) மாலை இந்தியாவிற்குள் நுழைந்தான். உடனே சிறுவனை சுற்றிவளைத்த ராணுவ வீரர்கள், அவனை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். சிறுவன் திரும்பிச் செல்லாமல் பயத்தில் அழ தொடங்கினான்.

பின்னர் ராணுவ வீரர்கள் அவனை சமாதானப்படுத்தி, உணவளித்துள்ளனர். அதையடுத்து, அவன் பாகிஸ்தானில் உள்ள பார்க்கரில் வசிக்கும் கரீம் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் பாகிஸ்தான் எல்லையோர ராணுவ வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சிறுவனை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் பர்மரிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த 19 வயதான ஜெமராரம் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா, பாகிஸ்தான் அமைதியை அடைய ஒரே வழி காஷ்மீர்- மெகபூபா முப்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.