ஜம்மு & காஷ்மீர்: ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் மேஜர், கர்னல் மற்றும் டிஎஸ்பி உரியிழந்தனர். இந்த தாக்குதல் இன்று (செப்.13) மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது. இதில், கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோனக், ஜம்மு & காஷ்மீர் டிஎஸ்பி ஹுமாயூன் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்களை ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 3 பேருக்கும் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் காப்பாற்ற முடியவில்லை. கர்னல் மற்றும் மேஜர் ஆகியோர் ராணுவத்தில் RR 19ல் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “நேற்று இரவு காவல் துறையினரிடம் இருந்து தரவுகளைப் பெற்று, கடோல் பகுதியை சுற்றி பாதுகாப்பு அமைக்கப்பட்டது. மேலும், இரவு நேரம் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிறுத்தப்பட்டது. காலையில் நடவடிக்கை தொடங்கியதும் பயங்கரவாதிகள் தப்பிச்செல்ல முயற்சித்தனர். இதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கர்னல் சிங் துப்பாக்கி குண்டுகளை தனது மார்பில் வாங்கி உயிர்த் தியாகம் செய்தார். மேலும், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் பார்டரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தி படுகாயம் அடைந்தனர்” என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இவர்களின் மறைவிற்கு ஜம்மு & காஷ்மீர் இரு முன்னாள் முதலமைச்சர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருடன் தொடர்ந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும்படிங்க:தனிமையில் ஆபாசப்படங்கள் பார்ப்பது குற்றம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி.!