அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு அமைய உள்ள ராமர் கோயிலை அமைத்து நிர்வகிக்க ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு இணைந்து கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை வசூலித்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 12.47 கோடி குடும்பத்தினரிடம் தற்போதை வரை நன்கொடை பெறப்பட்டுள்ளது.
அதில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் சுமார் 17 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் கலாச்சாரத்திற்காக ஜம்மு காஷ்மீர் ஆர்வத்துடன் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், மேலும் அங்கிருந்து பங்களிப்புகள் வரும் என நம்புவதாகவும் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீவிர அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா ஏ.கே. ஆண்டனி?