ETV Bharat / bharat

"மசோதா யார் கொண்டு வந்தது.. நாங்க கொண்டு வந்தது" - மகளிர் இடஒதுக்கீடு குறித்து சோனியா காந்தி!

'It's ours, Apna Hai': Sonia Gandhi on Women's Reservation Bill: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு யார் கொண்டு வந்தது என்றும் நாங்கள் கொண்டு வந்தது எனவும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

its-ours-apna-hai-congress-leader-sonia-gandhi-said-on-womens-reservation-bill
மசோதா யார் கொண்டுவந்தது; நாங்கள் கொண்டுவந்தது - மகளிர் இடஒதுக்கீடு குறித்து சோனியா காந்தி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 1:52 PM IST

டெல்லி: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு யார் கொண்டு வந்தது, நாங்கள் கொண்டு வந்தோம் என காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். இன்று (செப்.19) புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் மாநிலங்களவை சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளுவதற்காக சோனியா காந்தி வந்தார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்ட பேரவையில் 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மகளிர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று (செப்.18) ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (செப்.18) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை மற்றும் சட்டபேரவையில் மகளிருக்கான இடஒதுக்கீடு 33 சதவீத வழங்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று (செப்.19) கூறும் போது, மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் மேலும் இந்த மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் தகவல் தொடர்புத் துறை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (செப்.18) "X" தளத்தில் தெரிவித்துள்ள பதிவில் அரசியலமைப்புச் சட்டத்தின் 108வது திருந்த மசோதா 2008ஆம் ஆண்டு மசோதாவை அமல்படுத்தக கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறது. தற்போது மத்திய அமைச்சரவை முடிவை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் மசோதாவின் விவரங்கள் எதிர்நோக்குகிறோம் மேலும் சிறப்பு அமர்வுக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மகளிர் மசோதா குறித்து விரிவாகப் பேசி ஒருமித்த கருத்தை தெரிவித்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

  • If the government introduces the Women's Reservation Bill tomorrow, it will be a victory for the Congress and its allies in the UPA government

    Remember, it was during the UPA government that the Bill was passed in the Rajya Sabha on 9-3-2010

    In its 10th year, the BJP is…

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தனது "X" பதிவில், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2010 மார்ச் 9ஆம் தேதி நிறைவேற்றினார். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யபடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Women's Reservation : மகளிர் இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.