பெங்களூரு: கடந்த 4ஆம் தேதி எத்தியோப்பியாவிலிருந்து பெங்களூரு வந்த நபருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து அவருக்கு குரங்கம்மை பரிசோதனை நடத்தப்பட்டு, மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த நபருக்கு குரங்கம்மை இல்லை என்றும், சின்னம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குரங்கம்மை பரவலை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருக்கின்றனவா? என்று விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.