ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் மாபெரும் ராக்கெட் 'எல்விஎம்3-எம்2’ வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. மொத்தம் 36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. இதனை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகக் கருதுகின்றனர். இந்த ராக்கெட் நள்ளிரவு 12:07 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த வகை ராக்கெட் இதுவரையில் அரசு செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தது.
தற்போது முதன்முறையாக வணிகச் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாகத் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணியாகும். பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது. எல்விஎம் 3 வணிக சந்தைக்கு வர வேண்டும் என்று அவர் விரும்பினார். நமது ராக்கெட்களை பயன்படுத்தி வணிக தளத்தில் முன்னோக்கு செல்வதற்கு அவர் அளித்த ஆதரவு முக்கியமானது.
நாங்கள் ஏற்கனவே தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டோம். 36 செயற்கைகோள்களில் 16 கோள்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைகோள்கள் விரைவில் பிரிக்கப்பட்டு அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். தரவுகள் சிறிது மணி நேரங்களில் கழித்து இணைக்கப்படும். சந்திராயன் - 3 கிட்டதட்ட தயாராகிவிட்டது. இன்னும் சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சந்திராயன் - 3 விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகளாக உள்ள பிரச்சனை 100 நாளில் தீர்க்க இயலாது - பிரதமர்