ETV Bharat / bharat

விக்ரம் லேண்டரின் முதல் 3டி புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ! - 3டி படம்

ISRO releases first 3D image: நிலவில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் விக்ரம் லேண்டரின் முதல் 3டி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 7:27 PM IST

ஹைதராபாத்: இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “அனாக்லிப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களில் இருந்து முப்பரிமாணங்களில் குறிப்பிட்ட பொருள் அல்லது நிலப்பரப்பின் எளிய காட்சிப்படுத்துதல் ஆகும். பிரக்யான் ரோவரில் எடுக்கப்பட்ட இடது மற்றும் வலது படத்தைக் கொண்ட நேவியேஷன் கேமரா, ஸ்டீரியோ படங்களைப் பயன்படுத்தி அனாக்லிப்பை உருவாக்கி உள்ளது.

இந்த 3டி படத்தில், இடது பக்கம் சிவப்பு சேனலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில், வலது பக்கம் நீலம் மற்றும் பச்சை சேனல்களில் வைக்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களுக்கு இடையேயான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இது மூன்று பரிமாணங்களின் காட்சித் தோற்றத்தை அளிக்கிறது.

  • Chandrayaan-3 Mission:

    Anaglyph is a simple visualization of the object or terrain in three dimensions from stereo or multi-view images.

    The Anaglyph presented here is created using NavCam Stereo Images, which consist of both a left and right image captured onboard the Pragyan… pic.twitter.com/T8ksnvrovA

    — ISRO (@isro) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த புகைப்படத்தை 3டி-இல் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது நேவியேஷன் கேமரா LEOS / ISROஆல் உருவாக்கப்பட்டது. தரவு செயலாக்கம் விண்வெளி செயலி மையம் அல்லது இஸ்ரோவால் மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் தரையிரங்கிய 4வது நாடாகவும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை படைத்தது.

இதனையடுத்து, விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவார் ஆகியவை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கந்தகம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதாக இஸ்ரோவால் அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல், அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) டைட்டானியம் (Ti), மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகிய தனிமங்களும் நிலவின் தென் துருவத்தில் இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதிபடுத்தியதாக இஸ்ரோ அறிவித்தது.

முன்னதாக, பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தையும், விக்ரம் லேண்டர் சுழல்வதை பிரக்யான் ரோவர் வீடியோவாகவும் பதிவு செய்த காட்சியை இஸ்ரோ வெளியிட்டது. இவ்வாறு அடுத்தடுத்து நிலவின் புதிய தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

மேலும், ஆகஸ்ட் 23ஆம் தேதிய தேசிய விண்வெளி தினமாக அறிவித்த பிரதமர் மோடி, நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த இடத்தை ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Valarmathi Isro : சந்திரயான்-3இன் குரலாக இருந்த தமிழக பெண் விஞ்ஞானி மரணம்! அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.