ஐதராபாத் : நிலவின் சுற்றுப்பாதைக்கு நுழையும் போது சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ள இஸ்ரோ, இதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் விணகலத்தின் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ள நிலையில், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள ஈர்ப்பு விசையின் மூலம் விண்கலத்தை இயக்குவதன் மூலம் வீண் எரிபொருள் விரயம் உள்ளிட்டவைகளை தடுக்க முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக பூமியின் சுற்றுவட்ட பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணியில் கடந்த 15ஆம் தேதி முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். பூமியின் முதல் சுற்றுவட்ட பாதையில் 15ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்தடுத்த கட்டமாக ஜூலை 17ஆம் தேதி இரண்டாவது வட்ட பாதையிலும், 3வது வட்ட பாதைக்கு 18ஆம் தேதியிலும், அதேபோல் 4வது வட்ட பாதைக்கு 20ஆம் தேதியும் நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை 25) மதியம் 2.47 மணிக்கு 5வது வட்ட பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது இதையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.
இதற்காக ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உயர் தொழில் நுட்ப கேமரா மூலம் நிலவை எடுத்த காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தன் ட்விட்டர் பக்கத்தில், "நிலவின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் பார்வையில் நிலா" என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
-
The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நிலவின் சுற்றுவட்டபாதையில் ஒவ்வொரு அடுக்குகளாக நுழைந்து சந்திரயான் 3 விண்கலம் தென் துருவத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலவின் அடுத்த அடுக்குக்குள் சந்திரயான் 3 விண்கலத்தை உந்துவிசை யுக்தி மூலம் செலுத்தும் பணியை இன்று (ஆகஸ்ட். 6) தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி ஆய்வு மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான்-3! இஸ்ரோ அறிவிப்பு!