இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இஸ்ரோ மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி மையம் பல ஆண்டுகளாக இணைந்து பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
2016, 2017 ஆண்டுகளில், இரு நாடுகளும் இணைந்து பல கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை மேற்கொண்டன. தற்போது, இரு தரப்பும் இணைந்து ஜியோ சயின்ஸ், விண்கல லேசர் தொழில்நுட்பம், ரேடார் தொழில்நுட்பம் ஆகியவற்றில் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகிறது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வணிக மேம்பாட்டிற்கு நடவடிக்கை; ரூ. 38 ஆயிரம் கோடி கூடுதல் கடன்தொகை பெறும் 15 மாநிலங்கள் எவை?