ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பாலப்பூரில் கணேஷ் பூஜா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக அங்கு தயாரிக்கப்படும் லட்டை வைத்து 11 நாள்கள் பிரத்யேக பூஜை செய்து ஏலத்தில் விடுவார்கள். இந்த நடைமுறையானது 1994ஆம் ஆண்டுமுதல் பின்பற்றப்பட்டுவருகிறது.
ஆரம்ப காலத்தில் ரூ. 450-க்கு விற்பனையான லட்டு, 2010ஆம் ஆண்டில் 10 லட்சம் ரூபாயை அள்ளியது. அன்றிலிருந்தே லட்டின் மவுசு மக்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்நிலையில், இந்த ஆண்டும் லட்டு ஏலம் விடப்பட்டது. 1,116 ரூபாயாக ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. 17 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.
இறுதியாக 18.9 லட்சம் ரூபாய்க்கு ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், தொழிலதிபர் மாரி ஷாஷன் ரெட்டி ஆகியோர் இணைந்து லட்டை ஏலத்திற்கு எடுத்தனர். இதுவரை ஏலம் விடப்பட்டதிலே இதுவே அதிகத்தொகை.
ஏலம் எடுத்த லட்டை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பரிசளிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக லட்டு ஏலம் ரத்துசெய்யப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கு இலவசமாக கோயில் குழு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல லட்சங்களை அள்ளும் ஃபேமஸ் பாலாபூர் லட்டு: கேசிஆருக்கு அடித்த அதிர்ஷ்டம்!