ETV Bharat / bharat

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற நபரை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை வீரர்கள்!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். சுதந்திரதினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

Infiltration
கோப்புப்படம்
author img

By

Published : Aug 14, 2023, 11:22 AM IST

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நேற்று(ஆகஸ்ட் 14) எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைப்பகுதியில் யாரோ அத்துமீறி நுழைவதைக் கண்டனர். உடனடியாக குறிப்பிட்ட பகுதிக்கு சென்று வீரர்கள் ஆய்வு செய்தனர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்திய எல்லையை நோக்கி வருவது தெரியவந்தது.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்திய எல்லையை நோக்கி வரக்கூடாது என எச்சரித்தனர். இருந்தபோதும் அந்த நபர் தொடர்ந்து தன் வழியில் முன்னேறி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக வீரர்கள் அந்த நபரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பதான்கோட்டில் சர்வதேச எல்லைப் பகுதியில் நள்ளிரவு 12.30 மணியளவில் பாகிஸ்தான் நபர் ஒருவர் ஊடுருவினார். வீரர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தபோதும் அந்த நபர் கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகவே தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சுதந்திர தினத்தை ஒட்டி எல்லைப் பகுதியில் நடந்த இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக கடந்த 11ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் டர்ன் டரன் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் ஊடுருவ முயற்சித்த நபரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த நபரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

அண்மைக்காலமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்புப் படை வீரர்கள் இந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதாகவும் தெரிகிறது. பாகிஸ்தானிலிருந்து இந்த ட்ரோன்கள் மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதிகளில் வீசப்படுவதாக தெரிகிறது. குறிப்பிட்ட இடத்தில் வீசப்பட்ட போதைப்பொருளை கடத்தல்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த போதைப்பொருட்களை பெரும்பாலும் பஞ்சாபில் உள்ள கடத்தல் காரர்கள் எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் முயற்சிகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். கடத்தல்காரர்களையும் வீரர்கள் கைது செய்கின்றனர்.

இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். ட்ரோன்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.