ஸ்ரீநகர் : ஜம்மு & காஷ்மீர் சர்வேதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் (Line of Control - எல்ஓசி) இந்திய ராணுவ வீரர்கள் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எல்லைக்கு மறுபுறம் பாகிஸ்தான் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி அர்னியா பகுதி மீது பாகிஸ்தான் நிலையில் இருந்து தொடர்ந்து குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ரானுவத்தினரின் பதுங்கும் குழிகளில் தங்கி உயிர் பிழைத்தனர். ராணுவத்தினரின் முன்னெச்சரிக்கையால் தங்களது உயிர் தப்பித்தது என அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்த சம்பவத்திற்கு பின் இந்திய ராணுவ உயர் அதிகாரிகளும், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பதற்றம் தணிந்தது. இந்நிலையில் நேற்று (அக். 29) இரவு கெரான் செக்டாரின் ஜூமாகுண்ட் பகுதியில் தீவிரவாதி ஒருவர் ஊடுருவ முயற்சி செய்த போது இந்திய ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதனால் அப்பகுதியில் நடக்கவிருந்த ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போது சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் தொடர் சோதனை வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரள குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு! சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுமி உயிரிழப்பு!