டெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சிராக் பகுதியில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழந்துள்ளது.
அங்கு இரண்டு மாத குழந்தை ஒன்றை வீட்டின் மைக்ரோவேவ் ஓவனில் இருந்து அக்கம்பக்கத்தினர் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த தென்மேற்கு டெல்லி காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய தென் டெல்லி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளரான பெனிட்டா மேரி ஜெய்கர்,"ஓவனுக்குள் குழந்தை எப்படி வந்தது, யார் அதில் குழந்தையை வைத்தது, இதன் காரணம் என்ன போன்றவற்றை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது, செவிவழி தகவல்கள் மூலம் விசாரித்து வருகிறோம். ஆனால், குழந்தையின் பெற்றோரையும், உறவினர்களையும் விசாரித்து பிறகுதான் உண்மை வெளிவரும். அதே நேரத்தில், குழந்தையை ஓவனில் இருந்து கண்டெடுத்த உடன், அதை மதன் மோகன் மாளவியா மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்ற பின்னர்தான் குழந்தை உயிரிழந்த தகவல் எனக்கு தெரியவந்தது. அதன்பின்னர், சிராக் டில்லியில் உள்ள குழந்தையின் வீட்டிக்குச் சென்று சிலரிடம் விசாரணை மேற்கொண்டேன். மேலும், அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில்தான் மைக்ரோவேவ் இருந்தது என அக்கம்பக்கதினர் கூறினர்" என்றார். முன்னதாக, குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரை அடுத்து, மாளவியா நகர் காவலர்கள் அங்கு குழந்தையை தேடிவந்தனர்.