இதுதொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இண்டிகோவின் 63ஆவது உள்நாட்டு இடமாக லே இருக்கும். தினசரி டெல்லி-லே விமானங்களுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.
லடாக்கின் தலைநகரான லே, அதன் அழகிய நிலப்பரப்புகள், தெளிவான வானம், சாகச நடவடிக்கைகள், பௌத்த மடங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு பெயர் பெற்றதாகும். இந்த இடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் தலைமை வியூக வகுப்பாளரும் வருவாய் அலுவலருமான சஞ்சய் குமார் கூறுகையில், "பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் இண்டிகோ நிறுவனம் பணியாற்றி வருகிறது. இது நாட்டில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும்" என்றார்.