ETV Bharat / bharat

இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே 2ஆவது மிகப்பெரியது - பிரதமர் மோடி - Narendra Modi in Surat

இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப்பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

indias-steel-industry-now-2nd-biggest-target-is-to-double-crude-steel-output-in-10-years-pm

author img

By

Published : Oct 28, 2022, 7:21 PM IST

காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்கம் தொடங்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், உருக்கு ஆலையின் மூலம் முதலீடு அதிகரிப்பதுடன், ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளுக்கும் உருவாகும். இந்த விரிவாக்கத்திற்கு பின்னர் ஹசீரா ஆலையின் கச்சா உருக்கு உற்பத்தி திறன் 9 மில்லியன் டன்னில் இருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.

2047ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் உருக்கு தொழில்துறையின் இலக்குகள் உள்கட்டமைப்பு துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இதே போல சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகங்கள், கட்டுமானம், வாகனத் தொழில், மூலதனப்பொருட்கள், பொறியியல் உற்பத்தி ஆகியவற்றில் உருக்குத்துறை பெரும் பங்களிப்பை வழங்கும். இந்த திட்டம் மேக்-இன்-இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் நம்புகிறேன். கடந்த 8 ஆண்டுகளில் அனைவரது முயற்சியின் காரணமாக இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப்பிடித்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களில் பயன்படுத்தப்படும் உயர்தரமான உருக்கு உற்பத்தியில் நாடு நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான மெட்ரிக்டன் உருக்கை உற்பத்தி செய்கின்றன. ஐஎன்எஸ் விக்ராந்த் உள்நாட்டு உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்பத்துடன் முழுமையாக தயாராகியுள்ளது. நாம் 154 மில்லியன் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்து வருகிறோம். இதனை அடுத்த 9, 10 ஆண்டுகளில் 300 மில்லியன் டன் என்ற அளவாக உயர்த்துவதே நமது இலக்காகும்.

ஒரு பக்கம் இந்தியா கச்சா உருக்கு உற்பத்தி திறனை விரிவாக்கும் நிலையில், மறுபக்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இது கார்பன் உமிழ்வை குறைப்பதுடன், கார்பன் மறு பயன்பாட்டுக்கும் வழிவகுக்கும். இலக்கு நோக்கிய முயற்சிகளை ஒவ்வொருவரும் முழுவேகத்துடன் தொடங்கும் போது அதனை எட்டுவது கடினமாக இராது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை பொதுவான அடையாளத்தை அளிக்கும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.