ETV Bharat / bharat

ரஷ்யா - உக்ரைன் போர்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன தெரியுமா? - ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும்

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்றும்; அமைதியான வழியில் தீர்வு காண வேண்டும் என்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போ
ரஷ்யா - உக்ரைன் போ
author img

By

Published : Feb 24, 2022, 9:29 PM IST

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருநாட்டு ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா ராணுவம் நுழைந்துள்ளது. மக்கள் எங்கும் வெளியேற முடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போரால் இந்திய மற்றும் தேசிய பங்குச்சந்தைள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஆபரணத் தங்கத்தின் விலை படிப்பாக உயர்ந்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளன. பொருளாதாரத் தடையை சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், 'ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும். அமைதியான வழியில் தீர்வு கிடைக்கும் என இந்தியா நம்புகிறது' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் பொலிகா, "உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தந்து உதவ வேண்டும். சாதகமான அணுகுமுறையை அளிக்க வேண்டும். பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் புதினைத் தொடர்பு கொண்டு பேச வேண்டும். இந்தியாவின் பங்களிப்பை தர வேண்டும். மோடி சொன்னால் புதின் அதைக் கேட்கக்கூடும்'' எனக் கூறினார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி, ரஷ்யா அதிபர் புதினை இன்று இரவு தொடர்பு கொண்டு பேசயிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்கக்கூடும் - இந்தியாவிடம் கெஞ்சிய உக்ரைன் தூதர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.