நாட்டில் கோவிட் இரண்டாம் அலை ஓய்ந்து, மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிவந்த நிலையில், தற்போது உருமாறிய கோவிட் தொற்றான ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்துவருகிறது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே நாளில், மும்பையில் இரண்டாயிரத்து 510 பேருக்கும், டெல்லியில் 923 பேருக்கும், பெங்களூருவில் 400 பேருக்கும், கொல்கத்தாவில் 540 பேருக்கும், சென்னையில் 294 பேருக்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஒமைக்ரான் தொற்றின் மொத்த பாதிப்பு 900ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. மேலும், தடுப்பூசித் திட்டத்தை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நாட்டில் இதுவரை 143 கோடியே 86 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 84 கோடியே 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 59 கோடியே 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
நேற்று(டிச.29) ஒரு நாளில் மட்டும் சுமார் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியாவுக்கு கோவிட் பாதிப்பு