ETV Bharat / bharat

மனிதவள மேம்பாட்டு குறியீடு - 131ஆவது இடத்தில் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது.

India's HDI
India's HDI
author img

By

Published : Dec 16, 2020, 5:22 PM IST

மனிதவள மேம்பாட்டு குறியீடு எனப்படும் (Human Development Index) விவரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யூஎன்டிபி (United Nation Development Programme) வெளியிட்டுள்ளது.

இந்தியா இரண்டு இடங்கள் சரிவு

கடந்தாண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 129ஆவது இடத்திலிருந்த நிலையில், தற்போது இரண்டு இடங்கள் சரிந்து 131ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சரிவு குறித்து UNDP அலுவலர்கள் கூறுகையில், பல்வேறு கூறுகளில் இந்தியா சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டாலும், மற்ற நாடுகள் இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டன. இதுவே, இந்தியாவின் பின்னடைவுக்கு காரணமாக உள்ளது என்றனர்.

குறியீடு கணக்கீட்டின் விவரம்

பொதுவாக மனிதவள மேம்பாட்டு குறியீடு மூன்று அலகுகளில் மேற்கொள்ளப்படுகிறது. சராசரி ஆயுட்காலம், கல்வி, தனிநபர் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு வெளியான பட்டியலின் முதலிடத்தில் நார்வே இடம்பிடித்துள்ளது. கடைசி இடமான 189ஆவது இடத்தை நைகர் பிடித்துள்ளது

டாப் 5 நாடுகள்

  1. நார்வே
  2. அயர்லாந்து
  3. ஸ்விட்சர்லாந்து
  4. ஹாங்காங்
  5. ஐஸ்லாந்து மற்றும் ஜெர்மனி

இதையும் படிங்க: தால் ஏரியில் விரைவில் மிதக்கும் ஆம்புலன்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.