ETV Bharat / bharat

மறைக்கப்பட்ட கரோனா மரணங்கள் 10 மடங்கு அதிகம்: வெளியான அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, அரசு கூறியதைவிட 10 மடங்கு அதிகம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Indias deaths
கோவிட்-19 மரணம்
author img

By

Published : Jul 20, 2021, 3:36 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு அதிகளவில் இருந்தது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 322 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்து லட்சத்து 14 ஆயிரத்து 482 ஆக உள்ளது.

கோவிட் மரணங்கள் மறைப்பு

இருப்பினும், கோவிட் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறிவந்தனர். மில்லியன் கணக்கான மக்கள், உயிரிழந்திருக்கக்கூடும் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, அரசு அதிகாரப்பூர்வமாகக் கூறியதைவிட 10 மடங்கு அதிகம் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

குறைந்தது 30 லட்சம் மக்கள் உயிரிழப்பு

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், "கரோனாவால் இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜனவரி 2020 - ஜூன் 2021 இடையிலான காலக்கட்டத்தில் குறைந்தது மூன்று மில்லியனிலிருந்து 4.7 மில்லியன் கணக்கான மக்கள் (தோராயமாக 30 லட்சம் முதல் 40 லட்சம்) கரோனாவால் உயிரிழந்திருக்கக்கூடும்.

ஒரே நேரத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட அதிகமான மரணங்களால், எண்ணிக்கையை தவறவிட்டிருக்கலாம். கரோனாவின் முதல் அலையிலேயே மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆனால், அவை முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கையை மாற்றும் மாநிலங்கள்

கடந்த சில மாதங்களாக ஒரு சில மாநிலங்கள், கரோனாவால் பதிவான உயிரிழப்பைக் கண்டறிந்து, தனது எண்ணிக்கையை மாற்றிவருகிறது. இது பல உயிரிழப்புகள் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுவதாகவும், தற்போது, வெளிவரும் கரோனா மரணம் தொடர்பான தகவல்கள், இந்தியாவில் கோவிட்-19 எந்தளவு பரவியிருந்தது என்பதையும் காட்டுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 125 நாள்களுக்கு பிறகு 30 ஆயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.