டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,712 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
புதன்கிழமை (ஜூன்1) நாட்டில் 2,745 பேர் புதியதாக கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாட்டின் தினசரி கோவிட் எண்ணிக்கை கடந்த சில மாதங்களை காட்டிலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக மே 9 அன்று ஒரே நாளில் 3,207 பேர் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து கரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் 0.05 சதவீத நேர்மறை விகிதம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரை சேர்த்து, நாட்டின் COVID-19 செயலில் உள்ள ஒட்டுமொத்த தொற்றில் 19,509 ஆக உள்ளது. இந்தியாவின் கோவிட் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் புதன்கிழமை 1,081 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 4,41,989 கோவிட்-19 சோதனைகளை நடத்தியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தரவுகளின்படி, நாட்டில் மொத்தமாக இதுவரை 85.13 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:தனியார் கல்லூரியில் 118 பேருக்கு கரோனா - அமைச்சர் ஆய்வு!