டெல்லி: ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சுமார் இருநூறு வழக்குகளில் தொடர்புள்ள மிகப்பெரிய திருடன் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டான். குற்றம் சாட்டப்பட்ட நபர் நாட்டின் மிகப் பெரிய கார் திருடனாகக் கருதப்படுகிறார். மேலும் மூன்று பெண்களைத் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 27 வருடங்களில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்ட அனில் சவுகான் சுமார் 6,000 வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் அவர் மீது இதுவரை 200 வழக்குகள் மட்டுமே இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக கார்களை திருடி வந்துள்ளார். "சவுகான் கார்களை திருடி அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் விற்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட சவுகானின் ஏராளமான சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 2015ஆம் ஆண்டில் சவுகான் உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவருடன் அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு விடுதலையான சவுகான் மீண்டும் வாகனத் திருட்டில் ஈடுபட்டு, ஆயுதங்களைக் கடத்தத் தொடங்கினார்.
திருடப்பட்ட காரில் ஆயுதங்களை வழங்குவதற்காக டெல்லிக்கு வந்ததாக கூறப்பட்ட தகவலையடுத்து, மத்திய டெல்லி காவல்துறையின் சிறப்பு பணியாளர்கள் சவுகானை கைது செய்ய கிளம்பினார். தற்போது மத்திய டெல்லி பகுதியில் சோதனை நடத்திய போது சவுகானை காவல்துறை கைது செய்தது. மேலும் அவரிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏழு தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சர்வ வசதிகளுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வருகை