வாஷிங்டன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக மாணவர்களுடன் நேற்று (அக் 13) உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவானது. வேறு எங்கிருந்தும் இறக்குமதி செய்யப்படாதது. வட மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து சில உதிரி பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 2024ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவைகள் எளிதாக கிடைக்கும். 130 கோடி இந்தியர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை பெறுவார்கள். அதேபோல மற்ற நாடுகளுக்கும் எங்களால் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கமுடியும்" என்று தெரிவித்தார்.
5ஜி தொழில்நுட்பம் சாமானிய மக்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும். இது தடையற்ற விரைவான அதிக தரவு வீதம், மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்க உதவும். மேலும், இது ஆற்றல் திறன், ஸ்பெக்ட்ரம் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும். 5ஜி தொழில்நுட்பம், உயர்தர வீடியோ சேவைகளை அதிக வேகத்தில் இயக்கப் பயன்படும்.
5ஜி, பேரழிவுகளை நிகழ்நேர கண்காணிப்பு, துல்லியமான விவசாயம், ஆழமான சுரங்கங்கள், கடல்சார் செயல்பாடுகள் போன்ற ஆபத்தான தொழில்துறை நடவடிக்கைகளில் மனிதர்களின் பங்கைக் குறைக்க உதவும். தற்போதுள்ள மொபைல் தொடர்பு நெட்வொர்க்குகளைப் போலல்லாமல், 5ஜி நெட்வொர்க்குகள் ஒவ்வொன்றிற்கும் தேவையான தேவைகளை வடிவமைக்க அனுமதிக்கும்.
"புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை இந்திய மொபைல் காங்கிரஸ் நடைபெற உள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான தத்தெடுப்பு மற்றும் பரவலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாய்ப்புகளை விவாதிக்க மற்றும் வெளிப்படுத்த முன்னணி சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.22.64 கோடி வருவாய் வசூல் - கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சாதனை