கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தற்போது, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளைப் பயன்படுத்த மாநில அரசு கோரிக்கைவிடுத்தது.
அதன்படி, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் ஒரு சில பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஊரடங்கு: தமிழ்நாடு - கர்நாடக இடையே பேருந்து இயக்கம்!