தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது போல ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
சில நாள்களுக்கு முன்னர் எல்பிஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடைகள்,உணகங்கள் நடத்துவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று புத்தாண்டு தினத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 102.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலை குறைப்பு இன்று (ஜன.1) முதல்நடைமுறைக்கு வருகிறது.
இதையும் படிங்க : இந்தியாவில் 1,431 பேருக்கு ஒமைக்ரான்; தமிழ்நாடு மூன்றாவது இடம்