ETV Bharat / bharat

கடற்கொள்ளையர்களை தடுக்க நடவடிக்கை! அரேபிய கடல், செங்கடலில் என்ன நடக்கிறது? - கடற்படை தளபதி!

இந்திய கடல் எல்லையில் கடற்கொள்ளையர்களின் ஊடுருவல்களை தடுக்க ஆளில்ல விமானங்கள் உள்ளிட்ட ராணுவ நிலைகளை நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளதாக இந்திய கடற்படையின் தளபதி ஹரி குமார் தெரிவித்து உள்ளார்.

Drishti 10 Starliner
Drishti 10 Starliner
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 3:50 PM IST

ஐதராபாத் : கடற்படைக்கான அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திரிஷ்டி 10 ஸ்டார்லின்னர் (Drishti 10 Starliner) ஆளில்லா விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் தளபதி ஹரி குமார் கலந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 40 முதல் 42 நாட்களில் வடக்கு மற்றும் மத்திய அரேபியக் கடல், செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான மற்றும் அந்நாட்டின் கொடி பொருத்திய அல்லது அந்நாடு தொடர்புடைய கப்பல்கள் மீது 35 ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதுபோன்ற இரண்டு தாக்குதல்களை இந்தியா எதிர்கொண்டு உள்ளதாகவும், அந்த இரண்டு தாக்குதல்களும் இந்திய கொடி பொருத்திய கப்பல்கள் மீது நடத்தப்படா விட்டாலும், அதில் இந்தியர்கள் இருந்த காரணத்திற்காக நமது ராணுவம் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இருந்ததாக அவர் கூறினார்.

இதன் காரணமாக வேறெதும் கடற்கொள்ளை கும்பல்களின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தின் நிலைகளை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் வடக்கு அரேபியக் கடலில் லைபிரியா நாட்டின் கொடி பொருத்திய கப்பலை கடற்கொள்ளையர்கள் கைபற்றிய நிலையில், அதை இந்திய கடற்படை முறியடித்து 15 இந்தியர்கள் உள்பட மாலுமிகளை மீட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படை, கடற்கொள்ளையர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 105 கப்பல்களை அந்தந்த நிலைகளில் கடற்படை நிறுவியதாகவும் அவர் தெரிவித்தார்.

கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தாக்குதல் நடத்திய ட்ரோன்களின் பாகங்களை தடயவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். இந்திய கடல் எல்லையில் கடற்கொள்ளையர்களின் ஊடுருவல்களை தடுக்க ஆளில்ல விமானங்கள் உள்ளிட்ட ராணுவ நிலைகளை நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளதாக இந்திய கடற்படையின் தளபதி ஹரி குமார் தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்திய நட்பு நாடுகள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி தாக்குதல் விமானங்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதன் அடிப்படையில் இந்தியாவும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவது விவேகமானது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : இந்தியா - ஆப்கானிஸ்தான் முதலாவது டி20 கிரிக்கெட் நடைபெறுமா? திடீர் சிக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.