ETV Bharat / bharat

Asian Games 2023 : ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம்! டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்திய அணி அபாரம்! - ஆசிய விளையாட்டு 2023

Asian Games 2023 Tennis Gold : ஆசிய விளையாட்டு தொடரின் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபன்னா - ருதுஜா போஸ்லே இணை சீன தைபே ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

Tennis
Tennis
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 1:29 PM IST

ஹாங்சோ : ஆசிய விளையாட்டு தொடரின் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

இந்திய வீரர் ரோகன் போபன்னா மற்றும் வீராங்கனை ருதுஜா போஸ்லே ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி ரோகன் போபன்னா மற்றும் ருதுஜா போஸ்லே, சீன தைபே கலப்பு இரட்டையர் ஜோடி துசாங் ஹவோ ஹுவாங் (Tsung-hao Huang) மற்றும் என் ஷூ லியாங் (En-shuo Liang) ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சீன தைபே ஜோடி 6-க்கு 2 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றின. மாறி மாறி தலா ஒரு செட்டை இரு அணிகளும் கைப்பற்றிய நிலையில் டை பிரேக்கர் சுற்று கொண்டு வரப்பட்டது.

விறுவிறுப்பாக நடந்த டை பிரேக்கர் சுற்றில் 10க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் ரோகன் போபன்னா மற்றும் ருதுஜா போஸ்லே ஜோடி அபார வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றியது.

இதையும் படிங்க : Asian games 2023 : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம்! வெள்ளி வென்ற இந்திய ஜோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.