திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கருவிகள் பிரிவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். அதன் பின், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், செயற்கையான இதயவால்வு, ஆக்சிஜன் செலுத்தும் கருவி போன்ற மருத்துவ உபகரணங்களை இந்த கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகத் தரத்திலான மருத்துவ உபகரணங்கள் இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களைவிட சுமார் நான்கில் ஒரு பங்கு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை குறைந்த செலவில் கிடைக்கின்றன. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிர்வாகத்தில் தற்சார்புடையதாக மாறுவதற்கான மத்திய அரசின் தற்சார்பு இந்தியாவின் கண்ணோட்டம் இதில் பிரதிபலிப்பதை காணலாம். இந்தியா தடுப்பூசிகள் உற்பத்தியை உறுதி செய்தது மற்றும் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கியது பாராட்டப்பட்டது.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த சுகாதார கவனிப்பின் நிலைமைகளை நாம் கற்றுக்கொண்டோம். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் மற்றும் இதர மாற்று மருத்துவ முறைகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களுக்கு இந்தியா ஆராய்ச்சி செய்ததை மேலை நாடுகள் வியப்புடன் பார்க்கத் தொடங்கின எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலந்து மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ... அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பைடன்..