டெல்லி: அரபிக் கடலில் சோமாலியா கடற்பகுதியில் சென்ற எம்வி லியா நார்ஃப்லோக் (MV LILA NORFOLK) என்னும் சரக்கு கப்பல் கடத்தப்பட்டது. இந்த கப்பல் லைபீரியா நாட்டைச் சேர்ந்த கப்பல் ஆகும். இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. கடத்தப்பட்ட எம்வி லியா நார்ஃப்லோக் கப்பலை, இந்தியக் கடற்படை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Cargo Ship with 15 Indians on board hijacked near Somalia, Indian Navy keeping a close watch
— ANI Digital (@ani_digital) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/wMlaaG918J#IndianNavy #Somalia pic.twitter.com/wdNzEfvz9e
">Cargo Ship with 15 Indians on board hijacked near Somalia, Indian Navy keeping a close watch
— ANI Digital (@ani_digital) January 5, 2024
Read @ANI Story | https://t.co/wMlaaG918J#IndianNavy #Somalia pic.twitter.com/wdNzEfvz9eCargo Ship with 15 Indians on board hijacked near Somalia, Indian Navy keeping a close watch
— ANI Digital (@ani_digital) January 5, 2024
Read @ANI Story | https://t.co/wMlaaG918J#IndianNavy #Somalia pic.twitter.com/wdNzEfvz9e
இந்திய கடற்படையைச் சேர்ந்த விமானம், கடத்தப்பட்ட கப்பலைக் கண்காணித்து வரும் நிலையில், கப்பலில் உள்ள மாலுமிகளுடன் தகவல் தொடர்பும் கிடைத்து உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஜன.04) மாலை சுமார் 5 முதல் 6 ஆயுதம் ஏந்திய நபர்கள் கப்பலில் ஏறியதாக கடல் வர்த்தக அமைப்பான UKMTO (United Kingdom Marine Trade Operations) தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கப்பலில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய கடற்படை ஐஎன்எஸ் சென்னை (INS Chennai (D65) கப்பலை எம்வி லியா நார்ஃப்லோக் கப்பலை நோக்கி அனுப்பி உள்ளது. இன்று (ஜன. 05) இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்து, கப்பலில் உள்ள மாலுமிகளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பிற அமைப்புகளுடன் இணைந்து இந்த பகுதியில் வணிக கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்வதில், இந்தியக் கடற்படை இறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் புகைப்படங்கள் வெளியானது!