ETV Bharat / bharat

"LACஐ சீனா தன்னிச்சையாக மாற்ற முயற்சிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" - இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை

மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control - LAC) தன்னிச்சையாக மாற்ற சீனா முயற்சிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

India
India
author img

By

Published : Dec 7, 2022, 8:10 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்தியா - சீனா உறவுகள் குறித்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "எல்லைப் பிரச்னையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தன்னிச்சையாக மாற்றியமைக்க சீனா முயற்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.

சீனா இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால், இருநாடுகள் இடையிலான உறவு மிகவும் கடினமாக மாறிவிடும். கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதே உண்மை" என்றார்.

பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "பாலஸ்தீன பிரச்னைக்கு இருதரப்பும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். பாலஸ்தீன அகதிகள் நலனுக்கு வழங்கப்படும் நிதியுதவியை இந்தியா அதிகரித்துள்ளது" என்றார்.

அதேபோல் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து பேசிய ஜெய்சங்கர், "பொருளாதார நெருக்கடியில் உள்ள தமிழ் மக்கள், சிங்கள மக்கள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இதுபோன்ற நெருக்கடி நிலையில் உள்ள அண்டை நாட்டுக்கு உதவுவதில் இந்தியா எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை" என்று கூறினார்.

மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஜெய்சங்கர் விளக்கினார்.

இதையும் படிங்க: 'ஜி 20 மாநாட்டின் மூலம் இந்தியா உலகளவில் மிளிரும்..!' - அமைச்சர் ஜெய்சங்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.