ETV Bharat / bharat

Ind Vs Nep Asia Cup 2023 : இந்தியா அதிரடி! சூப்பர் 4 சுற்றில் களமிறங்கும் இந்திய அணி!

Asia Cup 2023 : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

cricket
cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 6:47 AM IST

பல்லேகலே : நேபாளம் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டு உள்ள நிலையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று (செப். 4) இலங்கை பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் கோதாவில் இறங்கின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணியின் இன்னிங்சை குஷல் புருடல், ஆசிப் ஷேக் ஆகியோர் தொடங்கினர்.

நிதானமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயங்கர குடைச்சல் கொடுத்து வந்தனர். அடித்து ஆடிய குஷல் புருடல் தன் பங்குக்கு 25 பந்துகளில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்தடுதது களமிறங்கிய பிம் ஷர்கி (7 ரன்), கேப்டன் ரோகித பவுடல் (5 ரன்), குஷல் மல்லா (2 ரன்) என இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

இதனிடையே நிலைத்து நின்று விளையாடி அரை சதம் அடித்த தொடக்க வீரர் ஆசிப் ஷேக் தன் பங்குக்கு 58 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் குல்சன் ஜா (23 ரன்), திபேந்திர சிங் (29 ரன்), சோம்பல் கமி (48 ரன்) ஆகியோரின் ரன் வேகத்தால் நேபாளம் அணி 200 ரன்களை கடந்தது.

48 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை நேபாளம் அணி இழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியது. ஆட்டம் தொடங்கி 2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாகியும் மழை நிற்காத நிலையில் டக்வொர்த் லிவீஸ் விதிமுறைப்படி இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர். சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்ட இருவரும் நேபாளம் பந்துவீச்சாளர்களை ஒருவழி செய்துவிட்டனர் எனக் கூறலாம். இறுதியில் 20 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 147 ரன்கள் குவித்தது.

ரோகித் சர்மா 74 ரன்களுடனும், சுப்மான் கில் 67 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

இதையும் படிங்க : IND VS NEP: சிராஜ், ஜடேஜா அசத்தல்... 230 ரன்னில் சுருண்டது நேபாளம் அணி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.