ETV Bharat / bharat

"இயற்கை விவசாயத்தில் இந்தியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" பிரதமர் மோடி - மண்ணைக் காப்போம் விழாவில் மோடி

இந்தாண்டு பட்ஜெட்டில் கங்கை நதிக்கரையை ஒட்டிய கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இது இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

pm modi
pm modi
author img

By

Published : Jun 5, 2022, 3:45 PM IST

டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ‘மண்ணைக் காப்போம் இயக்கம்' குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர், "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் பலதரப்பட்டவை. உலகின் பெரிய நவீன நாடுகள் பூமியின் வளங்களை மேலும் மேலும் சுரண்டுவது மட்டுமல்லாமல்.

அதிகபட்ச கார்பன் உமிழ்வை செய்துவருகின்றன. உலகின் சராசரி கார்பன் வெளியேற்றம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 4 டன்னாகும். ஆனால், இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு 0.5 டன் மட்டுமே வெளியேற்றுகிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியா நீண்டகால தொலைநோக்குப் பார்வையில் செயல்பட்டு வருகிறது.

2070ஆம் ஆண்டுக்குள் இந்தியா பூஜ்ய கார்பன் உமிழ்வு என்னும் இலக்கை எட்டும். மண்ணைக் காப்பாற்ற ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம்.

  • மண்ணை ரசாயனமற்றதாக்குவது எப்படி?
  • தொழில்நுட்ப மொழியில் கூறப்படும் மண்ணில் வாழும் உயிரினங்களை எவ்வாறு காப்பாற்றுவது?
  • மண்ணின் ஈரப்பதத்தை எவ்வாறு பராமரிப்பது? அது வரை நீர் இருப்பை அதிகரிப்பது எப்படி?
  • நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்குவது எப்படி?
  • காடுகளின் குறைப்பினால் தொடர்ந்து மண் அரிப்பை எவ்வாறு நிறுத்துவது?

விவசாயத் துறையில் மண் பிரச்சினையைப் போக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நமது விவசாயிகளுக்கு மண்ணின் வகை, மண்ணின் குறைபாடு, எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்தது. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, நாட்டில் 13 பெரிய நதிகளை பாதுகாக்கும் பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நீர் மாசுபாட்டை குறைப்பதுடன், ஆறுகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் 7,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பாக அதிகரிக்க உத்தேசிக்கப்படுள்ளது. இதனால் நாட்டில் புலி, சிங்கம், சிறுத்தை, யானை என முக்கிய உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை விவசாயத்தில் நமது மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வு உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது இயற்கை விவசாயத்தின் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும். 2030 ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் இலக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. நாட்டில் சூரிய ஆற்றல் திறன் 18 மடங்கு அதிகரித்துள்ளது. இது கார்பன் உமிழ்வை படிப்படியாக குறைக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொஞ்சம் என்னன்னு பார்த்து விசாரிங்க மோடி ஜி: அண்ணாமலை குறித்து எம்.பி செந்தில்குமார் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.