டெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஜன.31) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 9 ஆயிரத்து 918 பேருக்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பாதிப்பை விட 24 ஆயிரத்து 363 குறைவாகும். கரோனா தொற்று விகிதம் 15.77 விழுக்காடாக உள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பி நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது. 18 லட்சத்து 31 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 959 பேர் கரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாட்டில் இதுவரை 166 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 227 கரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது வழக்குப்பதிவு