நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 35 ஆயிரத்து 871 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 172 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
இந்தியாவில் கோவிட் - 19 நிலவரம்
நாட்டில் இதுவரை ஒரு கோடியே 14 லட்சத்து 74 ஆயிரத்து 605 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 364 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 216 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார்ச் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றுவரை நாடு முழுவதும் 23 கோடியே 03 லட்சத்து 13 ஆயிரத்து 163 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று (மார்ச் 17) மட்டும் 10 லட்சத்து 63 ஆயிரத்து 379 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 20 லட்சத்து 78 ஆயிரத்து 719 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று கோடியே 71 லட்சத்து 43 ஆயிரத்து 255 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள்
கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 23 ஆயிரத்து 179 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.