டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 2,568 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 29 லட்சத்து 96 ஆயிரத்து 062ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கரோனா உயிரிழப்பு 5,15,974 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 33 ஆயிரத்து 917 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஏழு லட்சத்து ஓராயிரத்து 773 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 180 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 96 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 81 கோடியே 43 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடியே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர்.
மாநிலங்களின் வசம் தற்போதை நிலவரப்படி 17 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும், 12-15 வயதினருக்கான கோவிட் தடுப்பூசி திட்டத்தையும் சுகாதாரத்துறை அமைச்சகம் நாளை செயல்படுத்தவுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: ஹிஜாப் தடை செல்லும் - கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு