டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 25) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 866 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, புதியதாக கரோனா தொற்றுப்பாதிக்கப்பட்டவர்களுடன் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 877 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 621 பேர் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனா பாஸிட்டிவ் விகிதம் 7.03ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று (ஜூலை 24) ஒரே நாளில் 18 ஆயிரத்து 148 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 39 ஆயிரத்து 751 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நேற்று நடத்தப்பட்டன' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 28 லட்சத்து 83 ஆயிரத்து 489 கரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மேலும், நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ் இதுவரை மொத்தம் 202.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்: கேரளாவில் பன்றிகளை கொல்லும் பணி தொடக்கம்