டெல்லி: இந்தியாவுக்கு உடனடி தேவை தடுப்பூசி, உங்கள் வழக்கமான பொய்கள் அல்ல என பாஜக அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு தடுப்பூசிதான் உடனடி தேவை, மோடி அரசின் செயல்படாத தன்மையை மறைக்க பாஜக சொல்லும் பொய்கள் அல்ல. பிரதமர் மோடியின் பொய்யான பிம்பத்தை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள், வைரஸ் பரவலை எளிமையாக்குவதுடன், மனித உயிர்களையும் பலி கேட்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் குழுவிடம் ஆலோசனை கேட்காமல், தடுப்பூசி போடும் கால அவகாசத்தை இந்திய அரசு அதிகரித்ததாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளதை சுட்டிக்காடி ராகுல் இதை ட்வீட் செய்துள்ளார்.